மற்ற படங்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தது துல்கர் சல்மான் திரைப்படம்

636

மலையாள நடிகர் துல்கார் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து மற்ற மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளிவந்தது. இந்த திரைப்படத்தின் கதை ஆண்களை ஏமாற்றும் அழகான பெண்கள் என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

இந்த படத்தின் ஆரம்பத்தில் கொள்ளையடிப்பதில் ஒன்று சேர்ந்து கடைசியில் காதலில் ஒன்று சேர்வது தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படம்.

இந்நிலையில் இந்த தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங் 7.1ஐ தொட்டது.

மற்ற திரைப்படங்கள் 6 என்கிற ரேட்டிங் அளவிலேயே இருந்து வந்தநிலையில் முதல்முறையாக அவற்றை பின்னுக்கு தள்ளியது துல்கர் சல்மான் திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம்.

Advertisement