வால்மார்ட் -ஐ ஆளும் அடுத்த சுந்தர் பிச்சை

520

சென்னை ஐ.ஐ.டி.யின் முன்னாள் பட்டதாரியான சுரேஷ் குமார் அவர்களை உலக புகழ்பெற்ற நிறுவனமான வால்மார்ட் தனது, தலைமை வளர்ச்சி அதிகாரி மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது.

சுரேஷ் குமார், சென்னையில் உள்ள மெட்ராஸ் இந்திய தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை தொழில்நுட்பம் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் Ph.D முடித்தவர்.

suresh-kumar

54 வயதான சுரேஷ் குமார் இதற்கு முன்பு Google நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு அவர் துணைத் தலைவராகவும் வீடியோ, விளம்பரங்கள் மற்றும் பகுப்பாய்வுகளின் பொது மேலாளராகவும் பணியாற்றினார்.

அமேசான் நிறுவனத்தில் அவர் பல்வேறு தலைமைப் பாத்திரங்களில் இடம்பெற்றிருந்தார், இதில் சில்லறை வியாபாரங்களுக்கும், தொழில்நுட்பத்துக்கும் தொழில்நுட்ப துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார்.

சுரேஷ் குமார் IBM தாமஸ் ஜே. வாட்சன் ஆராய்ச்சி மையத்தில் ஒரு ஆராய்ச்சி பணியாளராகவும் பணியாற்றியுள்ளார். சுரேஷ் குமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்நுட்ப தலைமைத்துவ அனுபவத்தை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of