தமிழகத்தில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை சரிவு..!

917

கடந்த கல்வியாண்டில், தமிழகத்தில் இருந்து 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து 1.23 லட்சம் பேர் தேர்வு எழுதி அதில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.

இது, கடந்த ஆண்டை விட 17 சதவீதம் குறைவு என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

கட் – ஆஃப் மதிப்பெண் குறைதல், நீட் தேர்வில் பழைய மாணவர்கள் அதிக இடங்களைப் பிடித்தல், மாற்றப்பட்ட புதிய பாடத்திட்டம் உள்ளிட்டவை காரணமாக நடப்பு ஆண்டில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement