பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் குத்தி கொலை

542

கன்னியாகுமரியில் பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டாறு புனித சவேரியார் ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கு இந்த நாட்களில் பிச்சை எடுக்க வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் காத்து கிடந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு செட்டிக்குளம் சந்திப்பில் பிச்சை எடுத்து கொண்டு இருந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாசனத்திற்கும் அருகில் இருந்த முதியவருக்கும் இடையே பிச்சை எடுப்பதில்  வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிரமடைந்த மாசாணம் அருகில் இருந்த கம்பியினை எடுத்து குத்தியத்தில் அவர் குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த கோட்டாறு போலீசார் மாசனத்தினை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிச்சை எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of