சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

223

அரசு அருங்காட்சியகம் மற்றும் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு குழுவினர் இணைந்து சஜ்சலப்பள்ளி கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டு பழமையான வரலாற்று கல்வெட்டை கண்டுபிடித்துள்ளனர்.இந்த கல் குத்துக்கல் அல்லது நெடுங்கல் என அழைக்கப்படுகிறது. இது இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் நினைவு சின்னமாக கருதப்படுகிறது.

இதன் அருகே சுமார் 300 ஆண்டுகள் பழமையான மாறுபட்ட உருவ அமைப்பில் புலிகுத்திப்பட்டான் என அழைக்கப்படும் கல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.