அரிவாளுடன் வந்த கொள்ளையன்.. தைரியமாக எதிர்த்த பெண்.. CCTV காட்சிகள்..

614

கர்நாடகாவில் நகைக்கடையில் அரிவாளை காட்டி நகைகளை கொள்ளையடிக்க முயன்ற நபரை நகைக்கடை ஊழியர்கள் விரட்டியடித்தனர்.

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் நாகப்பசெட்டி என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு நகை வாங்குவது போன்று வந்த நபர், திடீரென அரிவாளை காண்பித்து நகைகளை கொள்ளையடிக்க முயன்றார்.

இதனால் நகைக்கடை ஊழியர்கள் அச்சத்தில் உறைந்த நிலையில், சில ஊழியர்கள் அலறியடித்து ஓடினர். அதேசமயம் துணிச்சலாக செயல்பட்டு நகைக்கடை ஆண் ஊழியர் ஒருவரும், பெண் ஊழியர் ஒருவரும் கொள்ளையனை அடித்து உதைத்தனர்.

பெண் ஊழியர் நாற்காலியால் தாக்கி, கொள்ளையனை விரட்டியடிக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளன. அடி தாங்க முடியாமல் ஓடிய கொள்ளையன், 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகளுடன் தப்பிச் சென்றுள்ளான்.

இதுகுறித்து சிருங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.