இப்படி ஒரு மனதாபிமானமா… அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஏழைப்பெண்

575

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கோட்டைக் குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். கூலித்தொழிலாளியான இவரது வயது 10 மகன் சசிதரன் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

வறுமையில் வாடும் அவரது தந்தையில் நிலை அறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசு மூலம் ஆணை பெற்றுக் கொடுத்தார். இருந்தும் ஆபரேஷன் செய்வதற்கு சில காரணங்களால் நீண்ட காலம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கும், சாப்பாட்டு செலவுக்கும் பணம் இல்லாமல் ராஜ்குமார் சிரமப்பட்டு வருகிறார். இதுபற்றிய செய்தி வெளியான நிலையில், பட்டுக்கோட்டை நேதாஜி நகரைச் சேர்ந்த ஏழைப்பெண்மனி நந்தினி என்பவர், உயிருக்கு போராடும் சிறுவன் சசிதரனுக்கு உதவ முன்வந்தார்.

நந்தினியின் வயது 8 மகன் ராஜ்குமாருக்கு அடி வயிற்றில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவர்கள் அச்சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.

இதற்காக சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சசிதரனுக்கு ஏழைப்பெண் நந்தினி வழங்கினார்.

Advertisement