வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால் 7-ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு

684

தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியால், வரும் 7-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை, நுங்கம்பாக்கதில் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் அக்டோபர் 5 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், அந்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி  நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் எனவும் தெரிவித்தார்.

இது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் கூறிய பாலச்சந்திரன், இதனால், மீனவர்கள் யாரும் 5-ம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை தென்கிழக்கு அரபிக்கடல், குமரி கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். வரும் 7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக பாலசந்திரன் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of