சமையல் கியாஸ் விலை 2 ரூபாய் 89 காசுகள் உயர்வு

494

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை தினமும் அதிகரித்து வருகிறது.

இதேபோல் அவ்வப்போது சமையல் கியாசின் விலையும் உயர்ந்து வருகிறது. அந்த வகையில் மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை டெல்லியில் 59 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.

மானியம் உள்ள சிலிண்டர் 2 ரூபாய் 89 காசு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று இந்தியன் ஆயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

கியாஸ் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால், மானியம் பெறும் பயனாளிகளுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை இந்த மாதத்தில் இருந்து 376 ரூபாய் 60 காசுகளாக உயர்த்தப்படுகிறது.

இந்த விலை உயர்வு காரணமாக சாமானிய மக்களுக்கு பெரியஅளவில் பாதிப்பு இல்லை என்று இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of