கள்ளக்காதல் பிரச்சனை எலக்ட்ரீசியன் குத்திக்கொலை

512

திருப்பூர்  வசந்தம் நகரை சேர்ந்தவர் ரஜினி (40). எலக்ட்ரீசியன். இவரது மனைவி செல்வி (35). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் திருவண்ணாமலையில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வருகின்றனர்.திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் செல்வி வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை செய்து வரும் வாலிபர் வீரமணியுடன் பழக்கம் ஏற்பட்டது.ரஜினி வேலைக்கு சென்ற சமயத்தில் வீரமணி செல்வி வீட்டுக்கு வந்து அவரிடம் பேசி செல்வதாக கூறப்படுகிறது. நேற்று இரவு 9 மணியளவில் வீரமணியும், செல்வியும் தனிமையில் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது வேலை முடிந்து வீட்டிற்கு வந்த ரஜினி, தனது மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்த வீரமணியை கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வீரமணி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரஜினி வயிற்றில் குத்தினார். அதன் பின்னர் தப்பி ஓடி விட்டார்.

கத்திக் குத்தில் பலத்த காயம் அடைந்த ரஜினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரஜினி மனைவி செல்வியிடம் விசாரித்த போது தனக்கும் வீரமணிக்கும் கள்ள தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டார். வீரமணியை போலீசார் தேடி வருகிறார்கள். அவர் பிடிபட்டால் தான் பல்வேறு தகவல்கள் தெரிய வரும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of