சுங்கச்சாவடிகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் – வேல்முருகன்

129

சுங்கச்சாவடிகளுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நகராட்சி தேர்தலில் உரிய இடங்களை ஒதுக்க ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தாக கூறினார்.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 90 சதவீதம் ஒதுக்க வேண்டும் என்று  வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் விசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது என்பதற்காக ரசிகர்களால் இடையூறு ஏற்படும் என ரஜினி கூறிய கருத்து, அபத்தமானது என்று அவர் கூறினார்.

சுங்கச்சாவடி விவகாரத்தில் தாங்கள் மூட்டிய தீ பற்றி எரிகிறது என்றும், பரனூரை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவும் எனவும் அவர் தெரிவித்தார்.

சுங்கச்சாவடிகளில் கட்சி நிதி வசூலிப்பதில் பாஜக முதலிடம் காங்கிரஸ் இரண்டாம் இடம் என்று வேல்முருகன் குறிப்பிட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of