இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது ரஃபேல் விமானம்

454

பிரான்ஸ் உடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி, முதல், ரஃபேல் விமானம் இந்தியாவிடம் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

பிரான்சிடம் இருந்து சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்தது. அதன்படி, தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

துறைமுக நகரான பார்டியாக்ஸ் நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக 3 நாள் அரசு முறைப் பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றுள்ளார்.

பிரான்சிடம் இருந்து பெறப்படும் ரஃபேல் விமானத்திற்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர், அந்த விமானத்தில் ராஜ்நாத் சிங் பறக்க உள்ளார்.

Advertisement