மரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench

916

 

பூமி, 70 சதவிகிதம் நீரால் நிரம்பப்பெற்ற ஒன்று. அதில் பசுபிக் பெருங்கடலில் அமைந்திருக்கிறது “மரியானா அகழி” எனப்படும் பூமியின் மிகவும் ஆழமான பகுதி. “பிட்ச் பிளாக்” (Pitch Black) எனப்படும் மிகவும் இருள் சூழ்ந்த இந்த பகுதியில் வாழும் சில அதிசய உயிரினங்களை பற்றி காணலாம்.

marinaa-trn

“பயோலுமினசென்ட்” எனப்படும் ஒருவித ஒளிரும் அமிலத்தை தன் உடலில் கொண்டு அதன் மூலம் வேட்டையாடி உண்ணும் ஒரு வகை மீனான “Angler” என்ற தூண்டில் மீன் இந்த பகுதியில் வாழ்கின்றது.

sea-devil-1

“சாம்பி புழுக்கள்” இந்த புழுக்கள் மீன்கள் மற்றும் சுறாக்களின் எலும்புகளை உண்டு வாழ்கின்ற. இந்த வகை புழுக்களுக்கு பற்கள் கிடையாது, ஆதலால் இதன் வாயில் சுரக்கும் அமிலத்தை கொண்டு எலும்புகளை கரைத்து உண்கின்றன. பெண் பாலின புழுக்களே இவ்வாறு எலும்புகளை உண்கின்ற, காரணம் ஆண் பாலின புழுக்கள் பெண் புழுக்களின் உடலுக்குள் வாழ்கின்றன.

zombie

“டம்போ ஆக்டோபஸ்” டிஸ்னியின் டம்போ என்ற யானை போன்ற கதாபாத்திரத்தின் உருவம் கொண்டதால் இந்த ஆக்டோபஸ் அவ்வாறு அழைக்கப்டுகிறது. உலகில் ஒளி ஊடுருவக்கூடிய உடல் அமைப்பை கொண்ட வெகு சில உயிரினங்களில் இதுவும் ஒன்று. ஆக்டோபஸ் இனத்தில் சுமார் 23,000 அடி ஆழத்தில் வாழக்கூடிய ஒரே ஆக்டோபஸ் இதுதான்.

dumbo

Frilled shark, வாழும் படிமம் என்று அழைக்கப்படும் இந்த வகை சுறாக்கள் பல நூறு ஆண்டுகளாக பரிணாமவளர்ச்சி இன்று உலவும் உயிரினங்களாக பார்க்கப்படுகின்றன. 25 அடுக்கு பற்களை கொண்ட இவை, கடல் வாழ் பாம்புகளையே அதிகம் உண்கின்றன. இந்த சுறாக்கள் சுமார் 4 ஆண்டுகள் வரை தங்களது குட்டிகளை வயிற்றில் சுமக்கின்றன.

frilled

இந்த மரியானா அகழி இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படாத பகுதியாகவே இன்று வரை திகழ்கிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of