நம்மால் அழியும் அதிசய இனங்கள் !

1200

உலகத்தில் மனிதனை போல பல அதிசய இனங்கள் இயறக்கையை அழிக்காமல், அதனோடு இணைந்து இயற்கைக்கு தங்களால் இயன்ற நன்மையை செய்து வாழ்ந்து வருகின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் இயற்கையையும் அழித்து, அதை பாதுகாக்கின்ற உயிரினங்களையும் அழித்து, நமக்கே தெரியாமல் நம்மை நாமே அழித்துக்கொண்டும் வாழ்ந்து வருகிறோம்.

நியூஸிலாந்த நாட்டை பிறப்பிடமாக கொண்ட “காகாபோ” என்று அழைக்கப்படும் ஒரு மிக அழகிய பறவை இனம் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த வகை பறவைகளை “owl parrot” என்றும் அழைப்பர், காரணம் இவையும் ஆந்தைகளை போல இரவு நேரத்தில் வேட்டையாடி பகலில் தூங்கும். இது பறவை இனத்தை சார்ந்ததாக இருந்தாலும் இதனால் பறக்கமுடியாது.
kakapo

கடந்த 2016ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தற்போது உலகளவில் வெறும் 123 காகாபோ பறவைகள் மட்டுமே உயிரோட இருக்கின்றது. வனப்பகுதிகளின் அழிவும், விற்பனைக்காக அதிக அளவில் இந்த வகை பறவைகள் பிடிக்கப்படுவதுமே தற்போது இந்த இன பறவைகளை அழிவைநோக்கி அனுப்பியுள்ளது.

உலகத்தில் அதிக அளவு சுனாமி தாக்கிய இடங்களில் இந்தோனேசியாவில் இருக்கின்ற சுமத்ரா தீவும் ஒன்று. அந்த சுமத்ரா தீவில் தான் உலகத்தில் வேறெங்கும் இல்லாத மிகவும் குள்ளமான வகையை சார்ந்த காண்டாமிருகங்கள் வாழ்கின்றன, இரட்டை கொம்புகள் உடைய இந்த காண்டாமிருகங்கள் தற்போதைய நிலவரப்படி வெறும் 60 தான் உயிரோடு உள்ளது.

rhino

அதுமட்டுமில்லாமல் கடந்த மே 27ம் தேதி அந்த தீவில் மீதமிருந்த கடைசி ஆண் காண்டாமிருகம் ஒன்று உடல்நிலை சரியில்லாமல் பரிதாபகரமாக இறந்துள்ளது. இந்த இனத்தின் அழிவுக்கு முக்கிய காரணம், பாதுகாக்கப்பட வேண்டிய இனமா இந்த வகை காண்டாமிருகங்கள் அறிவிக்கப்பட்ட பிறகும் கூட அதிக அளவில் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டதே என்று WWF என அழைக்கப்படும் World Wild Life Foundation நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

chinese-pangolin

இது போன்று அழிவின் விளிம்பில் நிற்கும் அறிய உயிரினங்களுடைய வரிசையில் அடுத்து இருப்பது சீன பாங்கொலியான் என்று அழைக்கப்படும் சீன எறும்புண்ணிகள். ஆசிய நாடுகளில் மட்டுமே காணப்படும் இந்த அரியவகை எறும்புண்ணிகள் சீனா மட்டும் அதை சுற்றி உள்ள நாடுகளில் மிகவும் பிரபலமான உணவாக திகழ்கிறது, அதனாலேயே கடந்த 20 ஆண்டுகளில் இந்த உயிரினத்தின் எண்ணிக்கை அபாயகரமாக ஏறத்தாழ 93 சதவிகிதம் குறைந்துள்ளது.

இப்படி இயற்கையை அழிப்பது மட்டுமல்லாமல் அதை பாதுகாக்கும் பல அறிய உயிரினங்களையும் நம்முடைய சுயநலத்திற்காக அழித்துக்கொண்டு வருகிறோம். எதிர்காலத்தில் இந்த நிலை தொடராமல் நாமும் வாழ்ந்து நம்மை காக்கும் இயற்கையையும் காத்து நலமோடு வாழ வழிசெய்வோம்.

– லியோ (இணையதள அணி)

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of