வேலூர் தொகுதியில் நான் தோல்வியடைய காரணம்.. – ஏ.சி.சண்முகம்

479

முத்தலாக் சட்டம் மற்றும் காஷ்மீர் 370 பிரிவு நீக்கம் தான் தனது தேர்தல் தோல்விக்கு காரணம் என்று புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

வேலூர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுபான்மை மற்றும் இஸ்லாமிய மக்களின் வாக்குகளை பெற்று தி.மு.க வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். வாணியம்பாடி வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் தி.மு.க வென்றிருக்க முடியாது என்றார்.

இருப்பினும் தேர்தலில் அ.தி.மு.க-வின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் வேலூர் தொகுதி மக்கள் தன்னை கைவிட்டாலும் அவர்களை கைவிடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன் அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of