குடியரசு தினம் அன்றும் மது விற்பனை ஜோர்

361

குடியரசு தினத்தையொட்டி மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில்,காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றத்தில் அரசு டாஸ்மாக் கடையில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.நாட்டின் 70 வது குடியரசு தினமான நேற்று மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டன. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுகுன்றம் – கருங்குழி சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது.

கடையின் முன்புறம் கதவு மூடப்பட்டிருந்த நிலையில் பின்புறம் வழியாக மதுபானங்கள் கூவி கூவி விற்பனை செய்தனர்.

இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தும், போலீசார் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of