மணல் கடத்தல் சோதனைக்காக சென்ற விராலிமலை வட்டாட்சியர் சாலை விபத்தில் பலி

1444

விராலிமலை அருகே உள்ள வில்லாரோடை, ஆத்துப்பட்டி, கத்தலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கோரையாற்றில் மணல் கடத்தப்படுவதாக விராலிமலை வட்டாட்சியர் பார்த்திபனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து கடந்த 10 நாட்களாக இரவு நேரங்களில் அந்த பகுதியில் வட்டாட்சியர், உள்ளிட்ட வருவாய்த் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மணல் கடத்தல் சோதனைக்காக விராலிமலை வட்டாட்சியர் பார்த்திபன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் வட்டாட்சியரின் வாகனத்தில் கீரனூரில் இருந்து விராலிமலை சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

வாகனம் பூமரம் குளவாய்பட்டி அருகே வந்தபோது, இடது பக்க டயர் வெடித்து சாலை ஓரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வட்டாட்சியர் பார்த்திபன் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும வழியிலேயே வட்டாட்சியர் பரிதாபமாக உயிரிழந்தார். கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு.

மேலும் இந்த விபத்தில் ஆர்ஐ முத்துக்காளை(படுகாயம்), கிராம உதவியாளர் பால்ராஜ், ஓஏ மதியழகன், ஜீப் ஓட்டுநர் சரவணன் உள்ளிட்ட 4 பேர் காயமடைந்து விராலிமலை அரசு மருத்துவமனை மற்றும் திருச்சி தனியார் மருத்துவமனைகளில் அனுமதித்துள்ளனர்.

விபத்து குறித்து விராலிமலை போலீசார் விசாரணை.விபத்தில் உயிரிழந்த விராலிமலை தாசில்தார் புதுக்கோட்டை காந்திநகர் 2ம் வீதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement