வெளியானது இரண்டாம் ட்ரைலர்

137

அந்தோணி ரஸோ மற்றும் ஜோ ரஸோ இவர்களின் இயக்கத்தில் வெளிவரவிருக்கிறது 2019ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் படமான “அவெஞ்சர்ஸ் எண்டு கேம்”. பல கோடி அமெரிக்கா டாலர் செலவில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் உலகமெங்கும் திரைக்குவரவிருக்கிறது. இந்த திரைப்படத்தின் முதல் ட்ரைலர் கடந்த வருட இறுதியில் வெளியான நிலையில் இன்று அந்த திரைப்படத்தின் இரண்டாம் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ராபர்ட் டௌனே ஜூனியர், கிறிஸ் இவன்ஸ், மார்க் ராஃஅலோ உள்ளிட்ட 34 முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளிவரவிருக்கிறது இந்த பிரமாண்டம் திரைப்படம். இதற்கு முன் வந்த “அவென்ஜர்ஸ் இன்பினிட்டி வார்” என்ற திரைப்படம் சுமார் 204 கோடி அமெரிக்கா டாலர் அளவுக்கு ஓடி வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

“ஸ்டான் லீ”, இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். மார்வெல்ஸ் உருவாக முக்கிய காரணம் இவர் என்றால் அது மிகையல்ல. மார்வெல்ஸ் இதழில் வரும் கதைகள் படமாக்கப்பட்ட காலம் தொடங்கி அணைத்து திரைப்படங்களிலும் ஸ்டான் லீ நடித்துள்ளார். மார்வெல் திரைப்படங்களில் இவரின் சிறப்பு தோற்றம் வரும் காட்சிகளில் அரங்கம் அதிரும். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஸ்டான் லீ உயிரிழந்தார். இனி வரும் படங்களில் இவரின் சிறப்பு தோற்றம் இல்லாதது மிகவும் வருத்தமளிக்கும் என்பது ரசிகர்களின் கருத்து.