இலங்கை தொடர் குண்டு வெடிப்பு.., இந்தியர்களுக்கு உதவ தூதரகம் தயார்

441

ஈஸ்டர் பண்டிக்கையை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடிக்கொண்டு இருந்த நிலையில், இலங்கையில் தேவாயலங்கள், நட்சத்திர விடுதிகள், குடியிருப்புகள் என மொத்தம் 8 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகம் முன்வந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். உதவியோ அல்லது விளக்கமோ தேவைப்படும் இந்திய குடிமக்கள், எங்கள் உதவி மைய எண்களான 94777903082, 94112422788, 94112422789 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of