தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியை கடித்த பாம்பு

320
தாய்லாந்து பாங்காக் நகரில் வசித்து வருபவர் 75 வயது மூதாட்டி காயிவ் சத்சொபா. இவர் இரவு படுக்கறை கதவை திறந்து வைத்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரது வீட்டிற்குள் மலைபாம்பு ஒன்று புகுந்துள்ளது. தூக்கத்தில் காலை ஆட்டிக்கொண்டிருந்த மூதாட்டியின் காலில் திடீரென கடித்தது. உடனே பதறியடித்துக்கொண்டு எழுந்த மூதாட்டி டார்ச் லைட்டை அடித்து பார்த்துள்ளார்.
அப்போது அவரது காலுக்கு அருகில் மலைபாம்பு ஒன்று நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் போட்ட கூச்சலில் பாம்பு அச்சமடைந்து கழிவறைக்குள் புகுந்து கொண்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர், கழிவறையில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்துச்சென்று வனப்பகுதியில் விட்டு விட்டனர்.
மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் மூதாட்டியின் மகன் வீட்டிற்குள் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.