“பட.. பட.. பட..” சக ராணுவ வீரர்களுக்கு மற்றொரு வீரர் செய்த கொடூரம்..! 8 பேர் பலி..!

662

ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள சிட்டா மாவட்டத்தில், அந்நாட்டின் முக்கிய ராணுவத்தளம் அமைந்த்துள்ளது.

இந்த ராணுவத் தளத்தில் ராணுவ வீரர்கள் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்த போது, ராணுவ வீரர் ஒருவர் சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த இரண்டு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

குடும்ப பிரச்சனையில் ஏற்பட்ட மனநிலை மாற்றத்தால் ராணுவ வீரர், சக வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement