கஜா புயலின் வேகம் தற்போது 8 கிலோ மீட்டராக குறைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது

1207

13 கிலோ மீட்டராக இருந்த கஜா புயலின் வேகம் தற்போது 8 கிலோ மீட்டராக குறைந்து தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள கஜா சென்னையில் இருந்து 380கி.மீ. தொலைவிலும், நாகையில் இருந்து 400 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

புயலின் வேகம் அதிகரித்து தமிழகத்தை நோக்கி நெருங்கி வருவதால், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக கடலூர், நாகை துறை முகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

Advertisement