நீர் சேமிப்புக்கு செயல் திட்டம் வகுக்க வேண்டும்!- நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால்

841

நீர் சேமிப்புக்கு செயல் திட்டம் வகுக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார்.

அதில் தண்ணீர் என்பது மாநில பட்டியலில் உள்ளதால், மழை நீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு, நீர் உற்பத்தி ஆகியவற்றுக்காக தங்களது மாநிலத்திற்கென பிரத்யேக செயல் திட்டத்தை மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement