கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலம்: தமிழகத்திற்கு எத்தனாவது இடம் தெரியுமா?

526

கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 67 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2206 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 20917 பேர் கொரோனாவில் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் இருக்கும் மாநிலம் மகாராஷ்டிராவில் மொத்தம் 22171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 832 பேர் பலியாகி உள்ளனர்.

அதனை தொடர்ந்து குஜராத் இரண்டாம் இடத்தில் உள்ளது. அங்கு 8194 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 493 பேர் பலியாகியுள்ளனர். அடுத்த நிலையில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இங்கு 7204 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 1959 பேர் குணமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து டெல்லி நான்காம் இடத்தில் உள்ளது.

கொரோனா தாக்கம் அதிகம் உள்ள மாநிலங்கள் :-

மகாராஷ்டிரா – 22171, குஜராத் – 8194, தமிழ்நாடு – 7204, டெல்லி – 6923, ராஜஸ்தான் – 3814, மத்திய பிரதேசம்- 3614, உத்தர பிரதேசம் – 3467, ஆந்திரா- 1980, மேற்கு வங்காளம் – 1939, பஞ்சாப் – 1823, தெலுங்கானா – 1196.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of