கிரீஸ் நாட்டின் “கொரிந்த் கால்வாய்” – உருவான கதை | Corinth Canal

268

உலகில் கடல்வழி வாணிபம் தொடங்கிய காலம் தொட்டு அந்த வாணிபத்தை எளிதாக்க உருவாக்கப்பட்டதே கால்வாய்கள். கடல் வழி வணிகர்கள் தங்கள் பொருட்களை கொண்டு செல்ல காற்றின் திசை, கடல்நீரின் ஓட்டம் என்று பல விஷயங்களை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப கடல் வழித்தடங்களை உருவாக்கினார், இடைமறித்து நின்ற மலைகளின் ஓரங்களை செதுக்கி கால்வாய்களை உருவாக்கினார். அவ்வாறு உருவாக்கப்பட்ட கால்வாய் தான் தற்போதைய கிரீஸ் நாட்டில் உள்ள “கொரிந்த் கால்வாய்”.

Corinth

உலகின் மிக குறுகலான, சாதுர்யமான மாலுமிகளால் மட்டுமே கடக்க முடிந்த வெகு சில கால்வாய்களில் இதுவும் ஒன்று. ஆறு கிலோமீட்டர் தூரம் நீண்டுள்ள இந்த கால்வாய் 21 மீட்டர் அதாவது வெறும் 70 அடி அகலம் மட்டுமே கொண்டது.

corinth2

ஏஜியன் கடல் பகுதியில் கொரிந்து வளைகுடா மற்றும் சரோனிக் வளைகுடா பகுதிகளை இணைக்கும் விதமாக 1881ம் கட்டத்தொடங்கிய ஒரு கால்வாய் இது.

corinth-3

ஆனால் புவியியல் மாற்றங்களினாலும் அப்போதைய பொருளாதார சூழ்நிலையினாலும் முதலில் தடைபட்டு பின்னர் 1893ம் ஆண்டு இஸ்துவன் டோர் மற்றும் பெலா ஜெர்ஸ்டர் என்ற பொறியாளர்களால் சுமார் 6 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் கட்டிமுடிக்கப்பட்டது. ஆரம்ப காலம்தொட்டே குறைந்த அளவிலான வாணிபத்தையே இந்த கால்வாய் சந்தித்து வருகிறது, வண்டல் பாறைகளும் அதிக நிலநடுக்கம் கொண்ட இடமாகவும் இது திகழ்வதே இந்த குறைவான வாணிபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.