யமஹா நிறுவனத் தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது

237
Yamaha

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் யமஹா நிறுவனத்தில் 800 நிரந்தர தொழிலாளர்கள், 2ஆயிரத்து 800 ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக வலியுறுத்த தொழிற்சங்கம் அமைத்தவர்களை யமஹா நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

இதனை கண்டித்தும், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் காலைவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

இதைதொடர்ந்து நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் பணியில் சேர்ப்பபது, ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டன.

இதையடுத்து 55 நாட்களாக நடைபெற்ற வந்த தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.