இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற மாணவர்கள் சுவரில் மோதி பலி

1214

கன்னியாகுமரி மாவட்டம், சரவணன் (19), சுஜின் (19) மற்றும் அஜில் (20) ஆகியோர்  தனியார் பாலிடெக்னிகில் படித்துவந்தார்கள். இந்த மூன்றுபேரும் ஒரு பைக்கில் நேற்று இரவு காலியான ரோட்டில் வேகமாகச் சென்றுள்ளனர். பின் வாகனம் எதிர்பாராத விதமாக அங்குள்ள காம்பவுண்டு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சரவணன், சுஜின் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அஜில் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் சென்ற இருசக்கர வாகனம் சேதமடைந்தது. பின் அப்பகுதி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of