மலேசிய பிரதமர் மகாதிர் முகமது திடீர் ராஜினாமா

249

மலேசியாவில் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி மற்றும் மக்கள் நீதிக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கடந்த 2018-ஆம் ஆண்டு பகதான் ஹரப்பன் என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சி அமைத்தனர்.

தற்போது இரு கூட்டணி கட்சிகளுக்கும் இடையே முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தனது பிரதமர் பதவியை மகாதிர் முகமது ராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன் அவர் தனது கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகியிருப்பதாக தகவல்கல் கூறுகின்றன.

அதைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய அரசரிடம் மகாதிர் கொடுத்துள்ளதாகவும் அதனை அரசர் ஏற்றுக்கொண்டாரா என இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of