இனி கொரோனா டெஸ்ட் Free – உச்சநீதிமன்றம் உத்தரவு

369

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான பரிசோதனையை கட்டணமின்றி பரிசோதிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக தனியார் ஆய்வகங்கள் வசூலிக்கும் கட்டணம் தொடர்பாக சஷாங் தியோ சுதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைக்காக தனியார் ஆய்வகங்கள் 4 ஆயிரத்து 500 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த தொகையை சாமானிய மக்களுக்கு மிகவும் அதிகம் என்றும் இலவசமாக பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் அசோக் பூஷன், எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நாடு முழுவதும் 118 ஆய்வுக்கூடங்கள் மூலம் ஒருநாளைக்கு 15 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் 47 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் கொரோனாவில் தாக்கம் அதிகரித்து வருவதால் ஊரடங்கு எவ்வளவு நாள் நீடிக்கும், மேலும் எத்தனை ஆய்வுக்கூடங்கள் தேவைப்படும் என்று தீர்மானிக்க முடியாத நிலை உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதிகள், கொரோனா பாதிப்பை கண்டறியும் பரிசோதனையை கட்டணம் இன்றி இலவசமாக நடத்த வேண்டும் என்றும் இது தொடர்பான உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கட்டளையிட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் வேண்டும் என உத்தரவிட்டனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of