சிறுபான்மை இனத்தவர்கள் யார்?- தெளிவுபடுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு

893

நாட்டில் சிறுபான்மை இனத்தவர்கள் யார்? என்பதை மூன்று மாதங்களுக்குள் தெளிவுப்படுத்துமாறு தேசிய சிறுபான்மையின நல ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 8 மாநிலங்களில் இந்துக்கள், சிறுபான்மையினராக உள்ளதாகவும், ஆனால், சிறுபான்மையினர் பிரிவில் இந்துக்கள் இல்லாததால், அவர்களால் சிறுபான்மையினருக்கான வசதிகளை, பெற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் குறித்து தேசிய அளவில் கணக்கெடுக்காமல், மாநிலம் வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், சிறுபான்மையினருக்கான அந்தஸ்தை நிர்ணயிக்கும் வழிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிறுபான்மை இனத்தவர்கள் யார்? என்பதை 3 மாதங்களுக்குள் தெளிவுப்படுத்துமாறு தேசிய சிறுபான்மையின நல ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.