சி.பி.ஐ-க்கு கிடைத்த வெற்றி; மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட பின்னடைவு

84

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு சி.பி.ஐ-க்கு கிடைத்த வெற்றி என்றும் மம்தா பானர்ஜிக்கு ஏற்பட்ட பின்னடைவு என்றும் மத்தியச் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ்குமார் சில்லாங் சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும், இது சி.பி.ஐ-க்கு கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டார்.

லட்சக்கணக்கானோரின் பணம் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடத்த வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இது குறித்து மம்தா பானர்ஜி அமைதி காப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.