தினம் ஒரு பணி.. அசத்தும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

757

தமிழகத்தின் அமைச்சர்களில் தடாலடி பேச்சுக்கு சொந்தக்காரர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி..கொரோனா ஊரடங்கு காலத்தில் எந்த இடத்திலும் சிறிதளவு கூட பால் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மிகச்சிறப்பாக தன்னுடைய துறையின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்தும்,கண்காணித்து வருவது மிகவும் பாராட்டத்தக்கது.போக்குவரத்து முடக்கம்,கடைகள் அடைப்பு என பல சிரமங்கள் இருந்த போதும் கூட ஆவின் நிறுவனம் மூலம் இயங்கும் கடைகள் வாயிலாக பால் விநியோகம் மட்டுமல்ல அதன் மற்ற தயாரிப்புக்களான மில்க் ஷேக்,ஐஸ் கிரீம்,இனிப்பு வகைகள்,பிஸ்கட் பொருட்கள் என அனைத்தும் மக்களுக்கு தடையில்லாமல் கிடைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.பால்வளத்துறையின் அமைச்சராக மாநிலம் முழுக்க கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு ஒரு பக்கம்,மற்றொரு புறம் தன்னுடைய சொந்த மாவட்டமான விருது நகர் மக்களின் தேவைகளையும் அரசியல்வாதியாக பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அவருக்குண்டு.. அதிலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பட்டாசு கிளப்பி வருகிறார்…, விருது நகர் மக்களின் பல்வேறு தரப்பட்ட பிரச்சனைகளையும் கவனித்து சரி செய்து, தேவையான உதவிகளை செய்து விருதுநகர் மாவட்ட மக்களின் அன்பையும், அபிமானத்தையும் பரவலாக பெற்றிருக்கிறார்.கோவில் பூசாரிகள்,தினக்கூலிகள்,ஆட்டோ ஓட்டுனர்கள், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், ஏழை எளிய மக்கள் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் அனைத்து  தரப்பு மக்களுக்கும் ஏராளமான உதவிகளை நாள்தோறும் வழங்கி வருகிறார்.

குறிப்பாக,இந்த கொரோனா காலத்தில் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அம்மா உணவகங்களிலும் இலவசமாக உணவு வழங்கி வருகிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி.

மற்றொரு பக்கம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளோடு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி கொரோனா தடுப்பு பணிகளையும் சிறப்பாக மேற்கொண்டு,”தினம் ஒரு பணி” என்ற நோக்கத்தில் பல்வேறு புதிய திட்டப்பணிகளையும் தொடங்கிவைத்து பம்பரமாக சுழன்று வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி .எதிர்கட்சித்தலைவரான,திமுக தலைவர் முக ஸ்டாலினின் அறிக்கைகள். பேச்சுக்களுக்கு பதிலடி தருவது என அவர் செய்யும் அதிரடி அரசியலும் அதிமுக தொண்டர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.. அரசியலை விடுவோம்..அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் “தினம் ஒரு பணியும்” அவர் செய்து வரும் நிவாரண உதவிகளும் மிகவும் பாராட்டத்தக்கது..  வாழ்த்துக்கள் அமைச்சரே…..

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of