தஞ்சையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும்

350

தஞ்சையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் பணி இன்னும் ஒரு வாரத்திற்குள் நிறைவடையும் என மாநில வேளாண் இயக்குநர் தக்ஷிணாமூர்த்தி கூறியுள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மாநில வேளாண் இயக்குநர் தக்ஷிணாமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கஜா புயலால் தஞ்சையில் மட்டும் 800 ஹெக்டர் கரும்பும், 6 ஆயிரம் ஏக்கர் தென்னையும், 570 ஏக்கர் மக்காச்சோளமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இன்னும் 4 நாட்கள் கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளதாகவும், ஒரு வார காலத்திற்கு பணிகள் நிறைவடைந்து அறிக்கை அளிக்கப்படும் என கூறினார்.