அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர்.

126

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று முதல் பணிக்கு திரும்புகின்றனர்.9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால், அரசு அலுவலக பணிகள் முடங்கியதுடன், ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாததால் மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என தமிழக முதலமைச்சர் வலியுறுத்தினார். இதனிடையே போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் அறிவித்தனர்.

சென்னையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் போராட்டத்தை கைவிட்டு இன்று முதல் பணிக்கு திரும்ப உள்ளதாக தெரிவித்தனர்.