நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவி காலம் மேலும் 4 மாதம்..,

310

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணையை  நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

ஜெயலலிதாவுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள்  அனைவருக்கும்  சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்தநிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து மேலும் விசாரணை நடத்துவதற்கு  கால அவகாசம் கேட்டது.  மேலும் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவி காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் தற்போது  4-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது  என குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of