வீட்டிற்கு விருந்தாளியாக வந்த புலி.. ஓட்டம் பிடித்த மக்கள்

377

அசாமில் வெள்ளத்தில் தப்பி  ஊருக்குள் வந்த புலி ஒன்று, வீடு ஒன்றில் மெத்தை மீது படுத்து ஓய்வுவெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அசாமில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சில நாட்களாக பெய்த தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 67 பேர் பலியாகி உள்ளனர்.ஏறக்குறைய 64 லட்சம் பேர் வீடுகளையும், உடமைகளையும் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக புகழ்பெற்ற காசிரங்கா தேசிய விலங்கியல் பூங்காவிற்குள் வெள்ளநீர் புகுந்ததில் ஏராளமான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளன.

பல விலங்குகள் வெள்ளத்தில் தப்பி, வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்துள்ளன. வெள்ளத்தில் தப்பிய புலி ஒன்று, தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்துள்ளது.

அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லை. வீட்டின் உரிமையாளர்கள் திரும்பி வந்து போது, வீட்டிற்குள் மெத்தை மீது ஏதோ அசைவு தெரிந்துள்ளது. சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர், வெளியில் இருந்த இடைவெளி வழியாக பார்த்த போது, மெத்தை மீது புலி படுத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் வந்து புலியை வெளியேற்றி, பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அதற்குள் மெத்தையில் படுத்து புலி ஓய்வு எடுத்ததை வெளியில் இருந்து போட்டோ எடுத்தவர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of