அமேசான் காடுகளை பாதுகாக்க அள்ளிக் கொடுத்த ”டைட்டானிக்” ஹீரோ

828

அமேசான் மழைக்காடுகளை பாதுகாப்பதற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ 50 லட்சம் டாலர்களை உதவியாக வழங்கியுள்ளார்.

ஹாலிவுட் நடிகர்களான லியோனார்டோ டிகாப்ரியோ, லாரன் பவல் ஜாப்ஸ், பிரையன் ஷெத் இணைந்து ‘எர்த் அலையன்ஸ்’ என்ற பெயரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பை  தொடங்கியுள்ளனர்.

இந்த அமைப்பு அமேசானை பாதுகாக்கும் வகையில் உதவிகளை செய்ய அமேசான் வன நிதியம் என்ற பெயரில் நிதி திரட்டி வருகிறது.

இதன் மூலம் திரட்டப்படும் நிதி உதவி தொகை அமேசான் காடுகளைப் பாதுகாக்க தீவிரமாக பணியாற்றிவரும் 5 உள்ளூர் அமைப்புகளுக்கு போய் சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முதல்கட்டமாக 50 லட்சம் டாலரை நன்கொடையாக அளித்து நிதி திரட்டும் பணியை டிகாப்பிரியோ தொடங்கி வைத்துள்ளார்.