சேவை செய்ய திருமணத்தை ஒத்திவைத்த மருத்துவர் – கொரோனா தாக்கி உயிரிழந்த சோகம்

242

சீனாவின் வுகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.

இந்த வைரஸ் பாதிப்பிற்கு 2 ஆயிரத்து 236 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வுகான் நகரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த, பெங் யூன்ஹுவா என்ற மருத்துவர் கொரோனா தாக்கி உயிரிழந்துள்ளார்.

இவருக்கு கடந்த ஜனவரி மாத இறுதியில் திருமணம் செய்துகொள்வதாக இருந்தது. அதற்காக திருமண அழைப்பிதழ்கள் உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவைத்திருந்தார்.

ஆனால் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவேண்டும் என்ற நோக்கில் தனது திருமணத்தை ஒத்திவைத்திருந்தார்.

மருத்துவர் பெங் யூன்ஹுவாவுக்கு கடந்த ஜனவரி 25-ம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பெங் யூன்ஹுவா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால், கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்த மருத்துவ ஊழியர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of