விமானத்தில் சிறுத்தை புலி குட்டியை மறைத்து கடத்தி வந்த பயணி கைது!

175

தாய்லாந்தில் இருந்து சிறுத்தைபுலி குட்டியை மறைத்து கடத்தி வந்த பயணி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த தாய் ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னையை சேர்ந்த காஜா முகைதீன் என்பவர் சிறுத்தைபுலி குட்டியை மறைத்து கடத்தி வந்துள்ளார்.

கூடைக்குள் மறைத்து கடத்தி வைத்த முகைதீனை கைது செய்த சுங்கத்துறையினர், சிறுத்தை புலிக்குட்டியை பறிமுதல் செய்தனர். இது குறித்து சென்னையில் உள்ள வன உயிரின காப்பக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணியிடம் விசாரணை நடத்திய பின்னர், சிறுத்தை புலிக்குட்டியை மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.