அசாத்திய குழந்தை – குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய சத்தியம் தொலைக்காட்சி.

520

 

திருவண்ணாமலை ஆட்சியரை சந்திக்க வேண்டும் என்ற குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய சத்தியம் தொலைக்காட்சிக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.


திருவண்ணாமலை சாரோன் பகுதியை சேர்ந்த குமார், சுபஸ்ரீ தம்பதிக்கு நிக்கிதா என்ற 3 வயது பெண் குழந்தை உள்ளது.

சிறு வயதிலேயே அதிக நினைவாற்றலும், அறிவாற்றலும் உள்ள நிக்கிதா, உலகில் உள்ள அனைத்து நாடுகளின் கொடிகளையும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் தலைநகரங்களையும் தெரிந்து வைத்துள்ளார்.

மேலும் ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரைகள், கவிதைகள் உள்ளிட்டவற்றை தமிழில் மொழி பெயர்க்கும் நிக்கிதாவின் திறமைகள் அனைவரையும் வியப்ப்பில் ஆழ்த்தி வருகிறது.

இதுகுறித்து சத்தியம் தொலைக்காட்சியில் பிரத்யேகமாக செய்திகள் வெளியிடப்பட்டது. இதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி நேற்று சிறுமியின் வீட்டிற்கு நேரடியாக சென்று இன்ப அதிர்ச்சி அளித்தார்.

குழந்தையின் ஆசையை நிறைவேற்றிய சத்தியம் தொலைக்காட்சிக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்து கொண்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of