நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் நிராகரித்தது

289

வங்கி மோசடி செய்துவிட்டு இந்தியாவிலிருந்து தப்பியோடிய நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் பேங்கில் 13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அவர் லண்டனுக்கு தப்பியோடினார். இந்நிலையில்  அவர் லண்டனில் தனியாக உலவுவதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று வீடியோ வெளியிட்டது.

இதனையடுத்து, இந்தியா கொடுத்த அழுத்தம் காரணமாக நீரவ் மோடியை இங்கிலாந்து போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, நீரவ் மோடி தரப்பில் 2-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியா தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், நீரவ் மோடி மீதான குற்றச்சாட்டுக்கு, கூடுதல் ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனையடுத்து நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of