அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவு

895

ரூபாய் மதிப்பு சரிவு, வர்த்தகப் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளுக்குத தீர்வு காண்பது குறித்து விவாதிப்பதற்காக, மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையிலான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிவை சந்தித்து வருகிறது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

5 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த ஜூலை மாதம், வர்த்தகப் பற்றாக்குறை 18.02 பில்லியன் டாலராக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் 17.4  பில்லியன் டாலராக குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், ரூபாய் மதிப்பு சரிவு, வர்த்தகப் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறைகள் குறித்து சுரேஷ் பிரபு தலைமையில் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், மத்திய நிதியமைச்சத்தின் கீழ் இயங்கும் பொருளாதார விவகாரங்கள் துறை, நிலக்கரித் துறை அமைச்சகம், உருக்கு அமைச்சகம், பெட்ரோலிய அமைச்சகம், உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement