இடிந்து விழுந்த ரயில்வே சுரங்கத்தின் சுவர் – பொதுமக்கள் அதிர்ச்சி

144

செங்கல்பட்டு அடுத்த திருமணியில் இருந்து மோசிவாக்கம் வழியாக திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் உள்ள ரயில் தண்டவாளதை கடந்து செல்வதற்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் நடைபெறுவதற்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்றன. 2 ஆண்டுகளாக கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று சுரங்கப்பாதையின் சுவர் 30 மீட்டர் அளவிற்கு இடிந்து தரைமட்டமானது.

தரமற்ற முறையில் கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகள் குறித்து சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள், பொதுப்பணித் துறை, வருவாய்துறை ஆகியோர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தரமற்ற முறையில் கட்டுமான பணிகள் மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of