1 கிலோ கேக் வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் ஃப்ரீ- திருச்சி பேக்கரி அதிரடி!!

2138

பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டுவரும் நிலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பேக்கரி கடை ஒன்று வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் வித்தியாசமான சலுகையை அறிவித்துள்ளது. திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள ஹீபர் ரோட்டில் கேக் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் பேக்கரி புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு தயார் செய்து விற்கப்படும் கேக்குகள் 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது .

ஒரு கிலோ கேக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது. இங்கு பெட்ரோல் கூப்பன் பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்திற்கு சென்று அந்த கூப்பனை கொடுத்து ஒரு லிட்டர் பெட்ரோலை பெற்றுக்கொள்ளலாம். இச்சலுகை குறித்து பேக்கரி உரிமையாளர் சகாயராஜ் குறிப்பிடும்போது, இந்த சலுகை அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.  இச்சலுகை ஒரு மாதம் உள்ளது என்றார்.

மேலும் இதற்கு முன்பு ஒரு கிலோ கேக் வாங்கினால் குடை ஒன்று இலவசம் என்பதையும் அறிவித்திருந்தோம் என குறிப்பிட்டார் .இந்த பேக்கரி கடையின், பெட்ரோல் இலவச அறிவிப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement