செல்போனில் பேசியபடி காரை இயக்கியதால் விபத்து – தேநீர் கடைக்குள் கார் புகுந்ததால் பெண் பலி

270
car-accident

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே அதிவேகமாக வந்த கார் தேநீர் கடைக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.

அரக்கோணம் அருகே சுவால்பேட்டை அருகே சாலையோரம் இருந்த தேநீர் கடையில் சிலர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த கார் தேநீர் கடைக்குள் புகுந்தது.

இதில் கடைக்குள் இருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய  கார் ஓட்டுரை தேடி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,ஓட்டுநர் செல்போனில் பேசியபடியே காரை இயக்கியதே விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.