திருமண விழாவில் ஆடிய மாப்பிள்ளை… இவருடன் திருமணம் வேண்டாம் மணபெண்

526

உத்திரபிரதேசம் மாநிலம் பெராலி மாவட்டம் லக்கிம்பூர் கேரி பகுதியில் ஒரு திருமண விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண விழாவின் போது மணமக்கள் ஜோடியாக ஊர்வலமாக மேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஊர்வலம் முடிந்ததும் மாப்பிள்ளையின் தோழர்கள் மாப்பிள்ளையை குத்தாட்டம் போட வைத்தனர். நண்பர்கள் வற்புறுத்தியதால் மாப்பிள்ளை குத்தாட்டம் போட்டார்.

அவரை ஆட்டம்போடுவதில் இருந்து நிறுத்த பெண் வீட்டார் சில முயன்றதாகவும் ஆனால் அவர்களை மாப்பிள்ளை அவமரியாதை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின் அங்கு மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் மாலை மாற்றும் நிச்சிய நிகழ்ச்சி எல்லாம் நடந்தன.

அதன் பின் மாப்பிள்ளையின் தோழர்கள் மீண்டும் அவரை டான்ஸ் ஆட வர வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதனால் அவர் மீண்டும் போய் நாகினி டான்ஸ் ஆடினார்.

அப்பொழுது அவர் குடித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்துக் கோபமடைந்த மணப்பெண் தனக்கு இவருடன் திருமணமே வேண்டாம் எனத் திருமண மண்டபத்தை விட்டுச் சென்று விட்டார். இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.