உலக முதலீட்டாளர் மாநாடு ஒரு மாயமான் காட்சி – மு.க.ஸ்டாலின்

433

உலக முதலீட்டாளர் மாநாடு ஒரு மாயமான் காட்சி என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை அ.தி.மு.க தேர்தல் மாநாடாக மாற்றி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

2015-ஆம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவை கானல் நீராகிப் போனதாக சாடியுள்ளார்.

நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் 0.79 விழுக்காட்டை மட்டுமே தமிழகம் பெற்று இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது போடப்பட்டுள்ள 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் முழு விவரங்களும் வெளிவந்த பிறகே, அவை செயல் வடிவத்திற்கானதா? அல்லது அலங்கார கணக்குக்கானதா என்பது தெரிய வரும் என்று தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of