இளம் செல்வந்தரான அமெரிக்க மாடல் அழகி

257

அமெரிக்காவின் வர்த்தக பத்திரிகையான போர்ப்ஸ், 2019-ம் ஆண்டுக்கான உலக பணக்காரர்கள் பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதில் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகியும் தொலைக்காட்சி நடிகையுமான கெய்லி ஜென்னர் (வயது 21) சுய சம்பாத்தியத்தில் உலகின் இளம் செல்வந்தர் என்ற தகுதியைப் பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2016-ம் ஆண்டில் தனது பெயரில் தொடங்கிய அழகு சாதன பொருட்களை தயாரிக்கும் நிறுவனம், பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று லாபங்களை அள்ளிக்குவித்தது.

தற்போது கெய்லி ஜென்னரின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி டாலர் என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல மாடல் அழகி கிம் கர்தாசியான் கெய்லி ஜென்னரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.