திரையரங்குகள் திறக்கும் தேதி அறிவிப்பு.. முதல்வர் டுவீட்..

551

வைரஸ் தொற்று பரவலை தடுக்க, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. தற்போது, படிப்படியாக மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர்.

ஆனால், திரையரங்குகள் மட்டும் தற்போது திறப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதனால், திரையரங்கு உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், இயல்பு நிலைக்குத் திரும்பும் நோக்கில், அக்டோபர் 1-ஆம் தேதி முதல் திரையரங்குகள், நாடகங்கள், இசை, நடனம், மேஜிக் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை, 50 அல்லது அதற்கும் குறைவான பார்வையாளர்களுடன் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

இவற்றில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால், அம்மாநில திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.