தேர்தல் தேதி குறித்து சர்ச்சையில் சிக்கிய முதல்வர்???

376

தேர்தல் தேதி ஏன் இன்னும் அறிவிக்கப்படவில்லை என பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றன.

காங்கிரஸ் கட்சி பிரதமரின் நிகழ்சிகள் முடியும் வரை தேர்தல் ஆணையம் காத்திருக்கிறது இது ஜனநாயகத்தை கேலிகூத்தாக மாற்றும் செயல் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

இந்நிலையில் சேலத்தில் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மார்ச் மாதம் 11 அல்லது 12 ம் தேதி தேர்தல் அறிவிப்பு வந்து விடும்.

அதன் பிறகு ஒரே மாதத்தில் தேர்தல் நடைபெறும். தமிழகத்தில் முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் அதுவும் ஏப்ரல் 11 அல்லது 12 ம் தேதிகளில் நடைபெறும் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.